சமயபுரம் மாரியம்மன் கோவில் முன்புறம் உள்ள நுழைவுவாயில் மீது லாரி மோதியதில் தூணின் ஒரு பகுதி உடைந்தது…! ( வீடியோ இணைப்பு)
சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். மேலும், ஆடி வெள்ளி, ஆடி பதினெட்டு போன்ற முக்கிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இன்று( 03- 08 2024) ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் , சமயபுரம் கோவில் முன்புறமுள்ள நுழைவு வாயில் இடதுபுற தூணில் நேற்று இரவு அந்த வழியாக வந்த கனரக லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது .
இதில், அந்த தூணின் ஒரு பகுதி உடைந்தது. இதன் காரணமாக அந்த நுழைவு வாயிலில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Comments are closed.