தமிழர்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஆடி பெருக்கு விழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ந் தேதி இவ்விழா கொண்டாடப்படுவதால் ஆடி பெருக்கு விழா என்று அழைக்கப்படுகிறது.இந்த ஆண்டு கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.காவிரியில் இருந்து கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.பாதுகாப்பு கருதி காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளநீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் இந்த ஆண்டு தண்ணீர் அதிகமாக வருவதால் விவசாயம் உட்பட அனைத்துத் தொழில்களும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.இதனால் நீராதாரம் தரும் காவிரிக்கு நன்றி தெரிவிக்க பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். நாளை ஆடிப்பெருக்கு விழா ஆடிப்பெருக்கை முன்னிட்டு. நாளை (3ந்தேதி) சனிக்கிழமை அதிகாலை தொடங்கி தமிழகத்தில் பல் வேறு பகுதிகளி லிருந்தும் திருவரங்கம் அம்மாமண்டபம் காவிரிக்கரையில் பொதுமக்கள் கூடி, நீராடி, புத்தாடைகள் அணிந்து, படித்துறையில் தலைவாழை இலைபோட்டு காவிரித்தாய்க்கு, காப்பரிசி,காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் வைத்து படையலிட்டு, கற்பூர தீபம் காட்டி வழிபடுவர்.புதுமண தம்பதியினர் ஜோடியுடன் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி தாயை வணங்கி பூஜை செய்து புது மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வது வழக்கமாகும். இதேபோன்று திருமணம் ஆன சுமங்கலிகள் மற்றும் திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் பெண்கள் காவிரி தாயை நினைத்து மஞ்சள் கயிறு புதிதாக அணிந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு காவிரிஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் திருச்சி அம்மா மண்டபம் படித்துறை, சிந்தாமணி படித்துறை, அய்யாளம்மன் படித்துறை ஆகிய இடங்களில் படிக்கட்டுகள் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து நிரம்பி வழிந்து ஓடுகிறது. .மேலும் திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மற்றும் அய்யாளம்மன் படித்துறை துறையில் பொதுமக்கள் யாரும் படிக்கட்டில் இறங்காத வண்ணம் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர போலீஸ் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.குறிப்பாக மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் அம்மா மண்டபம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.ஆடிப்பெருக்கு விழா வை முன்னிட்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தாலும் தற்பொழுது அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை நிம்மதியாக கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் பிரதீப் குமார் கூறியதாவது., நாளை ஆடி பதினெட்டாம் தேதி ஆடிப்பெருக்கு அன்றும், மறுநாள் 4ந்தேதி ஆடி அமாவாசை அன்றும், காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோரத்தில், படித்துறை இல்லாத பகுதிகளில் மக்கள் இறங்குவதற்கும், நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுபோன்று மாவட்டத்தில், 52 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் இறங்குவதை தடுக்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்படும். திருவரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட படித்துறைகளில் உரிய பாதுகாப்புடன் பொதுமக்கள் குளிப்பதற்கும், வழிபாடு நடத்துவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.எனவே பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்கி, ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை விழாவை கொண்டாட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பிரதீப் குமார் கூறினார்.
Comments are closed.