தவெக தலைமையிலான அரசுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்)-ன் இரண்டு எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்திருந்தனர். இதையடுத்து, அமைச்சரவையில் ஐயூஎம்எல் இடம்பெற வேண்டும் என்றும், இரண்டு எம்எல்ஏக்களில் ஒருவரை அமைச்சராக்க விரும்புவதாகவும், அந்த ஒருவரை தெரியப்படுத்துமாறும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக ஆலோசிக்க ஐயூஎம்எல் மாநில நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் ஜோசப் விஜய், பெருந்தன்மையோடு ஐயூஎம்எல்-ஐ அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும், உங்கள் இரண்டு எம்எல்ஏக்களில் ஒருவரை அமைச்சரவையில் சேர்க்க முடிவெடுத்திருப்பதாகவும், அதற்கு உங்கள் ஒப்புதல் வேண்டும் என்றும் என்னிடம் கேட்டார். இது எங்களுக்கு எதிர்பாராத ஒரு செய்தி. நாங்கள் கேட்கவும் இல்லை, கோரிக்கையும் வைக்கவில்லை. இருந்தபோதும், எங்கள் கட்சியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பெருந்தன்மையோடு எங்களை அணுகியதற்காக நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜகானை அமைச்சரவையில் சேர்க்க முடிவெடுத்திருக்கிறோம். கூட்டணி குறித்து தேர்தல் காலத்தில் முடிவு செய்வோம்” என தெரிவித்தார். தவெக அமைச்சரவையில்
இடம்பெற சம்மதம் தெரிவித்த ஐயூஎம்எல்லின் பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான் நாளை( மே 22) அமைச்சராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.