திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள எஸ்.புதூர் பூசாரி கோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழகன். இவரது மகன் திவாகர்(27). முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த காதலில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த திவாகர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.