திருச்சி காந்தி மார்க்கெட் எம்.ஜி.ஆர் சிலை அருகில், பிற மதத்தினருக்கு ஆதரவாகவும், இந்துக்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட அரசு நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச். ராஜா, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன், விசுவ ஹிந்து பரிஷத் மாநில செயற்குழு நிர்வாகி பாண்டியன் மற்றும் அகில பாரத வழக்கறிஞரகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது எச்.ராஜா பேசுகையில், “ஸ்டாலின் குடும்பமே கிறிஸ்துவமயமாக மாறிவிட்டது என்று உதயநிதியே பேசியுள்ளார். தற்போது செந்தில் பாலாஜியை டி.ஜி.பி.சந்தித்தால் அவர் ஒரு கைதி என கண்டிப்பாரா அல்லது இலாகா இல்லாத அமைச்சர் என்பதால் சல்யூட் அடிப்பாரா?. மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வரும் திமுக கட்சியிலும் கட்டுப்பாடு இல்லை, அரசாங்கத்திலும் கட்டுப்பாடு இல்லை. தமிழகத்தில் தற்போது 50,000 ஏக்கருக்கு மேல் இந்து கோவில் நிலங்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளனர்.”தமிழகத்தில் மொத்தம் 39 மாவட்டங்கள் உள்ளது. அதில் 23 மாவட்ட ஆட்சியராக கிறிஸ்துவர்களாகவே இருக்கின்றனர். ஒரு அரசாங்கம் மதசார்ப்புடன் இருத்தல் கூடாது. இந்து சமய அறநிலையத்துறை செயல்படாத துறையாக உள்ளது, அதன் அமைச்சர் சேகர்பாபுவும் செயல்படுவதில்லை என்றார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.