திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஏர்போர்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் , திருச்சி மணிகண்டம் அக்ரஹாரம் தெரு பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (வயது 34), திருப்பூர் அவிநாசி ரோடு பகுதியைச் சேர்ந்த மீனாட்சி (48) ஆகியோர் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அதன்பேரில் அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கிருந்த திருப்பூர் கார்வம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண், துவாக்குடி மலை பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண் ஆகிய மூன்று பேரை போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். விபச்சார கும்பலிடம் இருந்து 5 செல்போன்கள், பேடிஎம் ஸ்வைப் மெஷின், ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Comments are closed.