Rock Fort Times
Online News

திருச்சியில் நகையை பறிக்க முயன்ற மர்ம நபர்களுடன் போராடிய வங்கி பெண் ஊழியர்…

திருச்சி கே.கே.நகர் எல்.ஐ.சி காலனி ஐய்யப்பன் நகர் கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி புஷ்பலதா (வயது 44). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு 8 மணி அளவில் தனது மொபட்டில் சாத்தனூர் சாலை பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரது தலையில் ஓங்கி அடித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்த தருணத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனே, சுதாரித்துக் கொண்ட புஷ்பலதா, தங்கச் சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால், அந்தச் சங்கிலி பாதியாக அறுந்தது. அதில் ஒரு பகுதியை மர்ம நபர்கள் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். மர்ம நபர்களுடன் புஷ்பலதா போராடியதால் 2 1/2 பவுன் தங்கச் சங்கிலி தப்பியது. இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து பெண்ணை தாக்கி தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்