தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி முத்தனாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 38). கார் புரோக்கர். இவருக்கும், முகமது ஹபீஸ் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்- வாங்கலில் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பாண்டியன், தனது நண்பர்களுடன் காரில் மேல்மருவத்தூருக்கு
சென்றார். பின்னர், அங்கிருந்து ஊர் திரும்பி கொண்டு இருந்தார். திருச்சி- திண்டுக்கல் மெயின் ரோடு கருமண்டபம் சாலையில் அவர் நின்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல் பாண்டியனை கடத்தி சென்றது. பிறகு அந்த கும்பலிடம் இருந்து ஒரு வழியாக பாண்டியன் தப்பித்தார் .
இதுகுறித்து ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த அவரது நண்பர் செந்தில்குமார் திருச்சி கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் முகமது ஹபீஸ் உள்ளிட்ட கடத்தல் கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் புரோக்கர் கடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.