108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது மான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கோவிலின் தெற்கு கோபுரம் அடுத்துள்ள ரங்கவிலாச மண்டபம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 33 கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த கடைகளை அகற்றும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இன்று(10-08-2024) 2 கடைகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. மீதமுள்ள கடைகளை அகற்றும் பணி நடந்த வருகிறது. நீதிமன்ற உத்தரவை ஏற்று கடைகளை அகற்றாவிட்டால் “சீல்” வைக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Comments are closed.