திருச்சி, சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது காசிம் (வயது 65). இவர் அந்த பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று முகமது காசிம் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் முட்டையை போட்டு வேக வைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அவர் அந்த பாத்திரத்தை தூக்கியபோது எதிர்பாராத விதமாக கைநழுவி அவரது மார்பிலும் இரு கைகளிலும் சுடு தண்ணீர் தெளித்து காயம் அடைந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.