திருச்சி கொட்டப்பட்டு தென்னூர் மந்தை மட்டும் உறையூர் பகுதிகளில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் கே.கே.நகர், தில்லை நகர் மற்றும் உறையூர் போலீசார் சம்பவ இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த எம்.சதீஷ் (வயது 38), சிந்தாமணி பகுதியை சேர்ந்த கே.சதீஷ் (40), அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் (46) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ.290-ஐ போலீசார் கைப்பற்றினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.