Rock Fort Times
Online News

எஸ்.வி. சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது… சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்..

பா.ஜ.க.வை சேர்ந்தவரும், நகைச்சுவை நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக அவரது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த பதிவிற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் அப்பதிவை நீக்கி மன்னிப்பு கூறினார். இருந்தாலும் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை எதிர்த்து எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று ( 14.07.2023 ) விசாரணைக்கு வந்தது. எஸ் வி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. . அப்போது நீதிபதி, எஸ்.வி.சேகருக்கு எதிரான வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பு மூலம் சரி செய்து விட முடியாது என்றும், தமக்கு வந்த தகவலை மற்றவர்களுக்கு பகிர்பவரே. அதனால் ஏற்படும் பாதிப்பிற்கு பொறுப்பானவர் எனவும் குறிப்பிட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்