Rock Fort Times
Online News

பெங்களூரு சென்ற ரயில் பெட்டியில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு…

சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் வண்டி எண் 22625 ஏசி டபுள் டக்கர் பயணிகள் விரைவு ரயில் இன்று ( 13.07.2023 ) காலை  வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தை தாண்டி விரிஞ்சிபுரம் குடியாத்தம் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலின் C6 பெட்டியில் இருந்து புகை வந்தது. முதலில் சிறிதாக ஏற்பட்ட புகை அதிகபடியாக எழுந்ததால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து சம்பவ இடத்திலேயே ரயில் நிறுத்தப்பட்டு புகை வராமல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதில் பயணிகளுக்கும் உடைமைகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் ரயில் அடுத்தடுத்த நிறுத்தங்களில் நிறுத்தி தொழில்நுட்ப வல்லுனர்களால் புகை ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு தடையின்றி பெங்களூர் நோக்கி சென்றது. புகை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஜோலார்பேட்டை இருப்பு பாதை காவல்துறையினர் தெரிவிக்கையில், 6 பெட்டியின் பிரேக் பைண்டிங் ஆனதால் ரயிலில் இருந்து புகை ஏற்பட்டதாலும், இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்தனர். ரயிலில் இருந்து குபுகுபுவென புகை ஏற்பட்டதால் பயணிகள் அச்சத்திற்கு உள்ளாகினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்