Rock Fort Times
Online News

மன உளைச்சலை குறைக்க யோகா பயிற்சி: போலீசார் விருப்பம் போல் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்….

போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா பேச்சு..

திருச்சியில் காவல் துறையினருக்கான மருத்துவ பரிசோதனை முகாமை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம். சத்திய பிரியா ஐபிஎஸ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மன உளைச்சலை குறைப்பதற்காக வாரம் ஒரு முறை யோகா பயிற்சி, அளிக்கப்பட உள்ளது. முதலில் அவர்கள் உடல்நலம் முக்கியம். ஆகையால் முதல் கட்டமாக இலவச மருத்துவ பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளோம். காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விருப்பம் போல் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது. காவலருக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என வரும் தகவல் பொய்யானது. இவ்வாறு அவர் கூறினார் .

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்