மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணிகள் மற்றும் போக்குவரத்து, மின்சாரம், அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் காண்ட்ராக்ட் விடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் காலத்தில் நிரந்தர படுத்துவதாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், நிரந்தர தன்மை வாய்ந்த வேலைகளில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஊதிய அரசாணையின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில துணைத் தலைவர் எஸ்.ரெங்கராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் எம்.பன்னீர்செல்வம், சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட தலைவர் டி. சீனிவாசன், மாநில குழு உறுப்பினர் எஸ்.செல்வி, மாவட்ட பொருளாளர் எஸ். மணிகண்டன், துணை தலைவர் மணிமாறன், துணை செயலாளர் என்.ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி. இளையராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், மாவட்ட தலைவர் சம்பத் ஆகியோர் பேசினர். முன்னதாக ஒத்தக்கடை பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று மாநகராட்சி அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட 65 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.