திருச்சி தென்னூர் சின்னசாமிநகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). இவர் மீது தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஒரு வழக்கில் சம்மன் பெறுவதற்காக தில்லைநகர் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளாா் விஜயகுமாா். அப்போது அங்கு பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர், அவரை பார்த்து திருடன் என கூறியதாக கூறப்படுகிறது. இதைக்கேட்டு மனஉளைச்சல் அடைந்த அவர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்று, அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கொண்டு மீண்டும் போலீஸ் நிலையம் வந்த அவா், போலீஸ் நிலையம் முன்பு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சமாதானப்படுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.