மலேசிய நாட்டின் சோழங்கர் பாம்பன் செர்க்காம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னா. இவரது மகன் முத்துவேல் ( வயது 69). இவர் சுற்றுலாவுக்காக தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சிக்கு வந்துள்ளார். திருச்சியில் மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில் அவர் ரூமை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதை அறிந்த ஊழியர்கள் ஹோட்டல் மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.ஹோட்டல் மேலாளர் கண்டோன்மென்ட் போலீசுக்கு தகவல் கொடுத்ததையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் ஓட்டலுக்கு விரைந்து சென்று, மாற்றுச்சாவி மூலம் அறையைத் திறந்தனர். அப்போது மலேசிய நாட்டு முதியவர் முத்துவேல் படுக்கையில் சடலமாக கிடந்தார். உடனடியாக போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ,தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.