Rock Fort Times
Online News

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை மின்தடை…. 

திருச்சி தென்னூர் துணை மின் நிலையத்தில் நாளை( 11-07-2023 )  செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, அன்று காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் பையாஸ் ரோடு, தேவர் காலனி, தென்னுர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோவில் தெரு, சாஸ்திரி ரோடு. ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகர், மதுரை ரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்செட்ரோடு, மேல்புலிவார்டுரோடு, ஐலால் பக்கிரிதெரு, ஜலால் குதிரிதெரு, குப்பாங்குளம். ஜாபர்ஷா தெரு, பெரிய கடை வீதி, சூப்பர் பஜார், சிங்கார தோப்பு, பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, கண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, கிலேதார் தெரு, சப்ஜெயில் ரோடு, பாரதிநகர், இதாயத் நகர், காயிதேமில்லத் சாலை, பெரியசெட்டிதெரு, சின்னசெட்டிதெரு, பெரியகம்மாள தெரு, சின்னகம்மாள தெகு, மரக்கடை பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், வெல்லமண்டி, காந்தி மார்க்கெட், தஞ்சைரோடு, கல்மந்தை மற்றும் கூனி பஜார் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்