Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையம் அருகே கத்தி முனையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பறிப்பு ரவுடி கைது !

திருச்சி விமான நிலையம் செம்பட்டு கீழ புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் வயது 47 இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.  நேற்றைய தினம் மாலை அவர் வயர்லெஸ் ரோடு பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார் அப்போது ஒரு வாலிபர் கத்தி முனையில் ரூ.1000 பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து விஜயகுமார் ஏர்போர்ட் போலீஸ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தி முறையில் பணம் பறித்த ஏர்போர்ட் அண்ணா நகர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சிவா என்கிற சிவனேசன் வயது 28 என்பவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.  இவர் ரவுடி பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்