Rock Fort Times
Online News

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

டாஸ்மாக் ஊழியர்களின் பணியிட பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். விற்பனை அடிப்படையில் ஊழியர்களை பணி நிரவல் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சி.ஐ.டி.யு.)சார்பில் இன்று (20.06.2023) கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். சிவனருட் செல்வன், வீரையன், கணபதி, லெனின் ,ராமலிங்கம், ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு. மாநகரச் செயலாளர்கள் ஸ்ரீதர், டாஸ்மாக் சிஐடியு மாவட்ட தலைவர்கள் ராமானுஜம், சிவக்குமார், வைத்தியநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல டாஸ்மாக் ஊழியர் சங்கம் செய்திருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்