Rock Fort Times
Online News

ஒரு வருடத்திற்கு பிறகு ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி…!

மேற்காசிய நாடுகள் போர் போன்ற பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு பவுன் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. தலைநகர் சென்னையில் தங்கத்தின் விலை ஒரு லட்சத்திற்கும் குறைவாக வீழ்ச்சி கண்டுள்ளது. கடைசியாக கடந்த ஜனவரி 1ம் தேதி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 99 ஆயிரத்து 520 ரூபாயாக இருந்ததே, மிகக்குறைந்த விலைவரம்பாகும். அதன் பிறகு தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை இன்று( நவம்பர் 17) சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 99 ஆயிரத்து 760 ரூபாயாக உள்ளது. கடைசியாக கடந்த 8ம் தேதி ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை, 9ம் தேதி கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த 8 நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்தபடியே உள்ளது. அந்த வகையில் 6 ஆயிரத்து 280 ரூபாய் கடந்த 8 நாட்களில் மட்டும் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்