Rock Fort Times
Online News

பணியில் கவனக்குறைவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை… *சிறைத்துறை காவலர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை!

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தேனி மாவட்டச் சிறையில் அக்டோபர் 26ம் தேதி இரவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். போலீசார் துரிதமாகச் செயல்பட்டு, தப்பிச் சென்ற 17 கைதிகளையும் மீண்டும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டச் சிறையில்,
சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வந்த துணைச் சிறை அலுவலர் நாகேஸ்வரன், சிறைக் கைதிகள் மற்றும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளில் உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக, தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதிகளின்படி மறு உத்தரவு வரும் வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறை நிர்வாகத்தில் கண்காணிப்பு, பொறுப்புடைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், மதுரை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் சேலம் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படாத வகையில், சிறைத் துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புகளை முழு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் மேற்கொள்ள வேண்டும். *பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்