Rock Fort Times
Online News

சத்யபாமாவை உருவக்கேலி செய்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் மீது திருச்சி காவல் நிலையங்களில் த.வெ.க.மகளிர் அணியினர் புகார்…!

கடந்த அக்டோபர் 2-ம் தேதி, இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் சென்றிருந்தார் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். அப்போது மேடையில் பேசும்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவை ‘பெட்டி பாமா’, ‘பல்டி பாமா’ என்று கூறி, உருவக்கேலி செய்வதுபோலப் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து
தவெகவின் மகளிர் அணி திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம், தில்லை நகர், அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஐந்து காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளது. இந்தப் புகாரை ஏற்று அந்தந்தக் காவல் நிலையங்களில் சி.எஸ்.ஆர் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு, ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து தவெகவின் வழக்கறிஞர் அணி தேர்தல் ஆணையம், டி.ஜி.பி, சென்னை காவல் ஆணையர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்