Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 21,655 பேர் பாதிப்பு…* அமைச்சர் அருண்ராஜ்..!

சென்னை, வடபழனியில் நடைபெறும் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர் அருண்ராஜ், வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு ஒழிப்புப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் அக்டோபர் 7 வரை, 21,655 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்