Rock Fort Times
Online News

பல கோடி ரூபாய் முறைகேடு என புகார்: அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை…!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மூலமாக நெல் முட்டைகளை அரிசியாக மாற்ற தனியார் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 11 இடங்களில் அரிசி ஆலை உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரத்தில் 9 இடங்களிலும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 11 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான டன் அரிசி இருப்பில் குறைபாடு இருந்ததும், உரிய தரப் பரிசோதனைகள் இன்றி முறைகேடுகள் நடந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. முறைகேடு புகாரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல மேலாளர், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்