திருச்சி, ஸ்ரீரங்கத்தில் கிரிக்கெட் போட்டியில் சுவாரஸ்யம்… முன்னாள் அமைச்சர்கள் பந்து வீச சிக்ஸர் விளாசிய அமைச்சர் ரமேஷ்…. ( வீடியோ இணைப்பு)
திருச்சி, ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக வெற்றிக் கழக திருச்சி மாநகர, மாவட்ட தொண்டரணி சார்பில் முதலாம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார். அப்போது நானும் விளையாடுகிறேன் என்று அமைச்சர் சொல்ல, அவருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக துணை பொதுச்செயலாளர்கள் வளர்மதி,
வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பந்து வீச அமைச்சர் ரமேஷ் சிக்ஸர் மற்றும் பௌண்டரிகள் விளாசினார்.
முன்னாள் அமைச்சர் வளர்மதி வீசிய பந்துகள் பிட்ச்சை விட்டு ‘வைடாக விலகிச் சென்றன. இதைப் பார்த்த அமைச்சர் ரமேஷ் “என்னக்கா… எல்லா பந்தையும் வைடாகவே வீசுறீங்க? என
கலாய்க்க, அங்கிருந்த தொண்டர்களும், கிரிக்கெட் ரசிகர்களும்
விழுந்து விழுந்து சிரித்தனர். முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சரின் இந்த ‘ஜாலி’ மோதல் அந்த இடத்தையே செம கலகலப்பாக்கியது.

Comments are closed.