தாராபுரத்தில் வெற்றி வாகை சூட களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்.. ரோடு ஷோவில் வழி நெடுக குவிந்த மக்கள்..!
தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் வருகிற 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தொகுதிகளில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவி வருகிறது. இந்த தொகுதிகளில் வெற்றியை
தனதாக்க அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்தவகையில் இன்று(02-10-2026) திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாராபுரத்தில் மாலை நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். முன்னதாக தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவிற்கு வாக்கு சேகரிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக ரோடு ஷோவில் பங்கேற்றார். இதில் வழிநெடுக ஏராளமாக மக்கள் திரண்டு நின்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Comments are closed.