Rock Fort Times
Online News

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி…!

தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் வேறு ஒரு கட்சியில் நின்று போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் இன்று (செப்டம்பர் 24) தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். சட்டம் இயற்றுவது என்பது நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தபட்ட விவகாரம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் விளக்கம் அளித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்