Rock Fort Times
Online News

பவர்ஃபுல் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டங்களில் ‘பவர் கட்’…!

தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் நேற்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று(24-09-2026) தாராபுரத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் கலந்துகொண்ட தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசிக் கொண்டிருக்கும் போது மின்வெட்டு ஏற்பட்டது.
இதேபோல மதுராந்தகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற ஒரு கூட்டத்திலும் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டது. உடனடியாக ஜெனெரேட்டர் இயக்கப்பட்டதால் ஆதவ் தனது பேச்சைத் தொடர்ந்தார். தவெகவின் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டங்களிலேயே மின்வெட்டு ஏற்பட்டது பேசு பொருளாகியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்