தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 16-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று (செப்.24) வரை இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் இன்று (செப்.24) நிறைவு பெறுகிறது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு நாள், நாளை (செப்.25) வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வுகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, மாணவர்களுக்கு வழக்கமாக விடப்படும் காலாண்டு விடுமுறை செப்.26-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் (காந்தி ஜெயந்தி (அக்.2) உட்பட மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிவடைந்த பிறகு, அக்டோபர் 5-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. அதனையும் மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.