Rock Fort Times
Online News

அடேங்கப்பா… 6 மாநில முதல்- அமைச்சர்கள் பங்கேற்கும் பிரபல தொழிலதிபர் இல்ல திருமண வரவேற்பு விழா…* சேலத்தில் நாளை நடக்கிறது..!

சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் செயல்படும் திரிவேணி குரூப்ஸ் மற்றும் லாயிட்ஸ் மெட்டல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி. கார்த்திகேயன்- கே.பிரேமலதா தம்பதியரின் மகன் கே.விஷ்ணு வர்தனுக்கும், டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் – எஸ் சுஜனா அபிராமி ஆகியோரின் மகள் எஸ். சாம்பவி ஸ்ரீ ரெங்க லட்சுமிக்கும் திருமண வரவேற்பு விழா நாளை(20-09-2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 5:15 மணி அளவில் சேலத்தில் பெங்களூரு-சேலம் நெடுஞ்சாலை, நாரணம்பாளையம் பிரிவு, ஓமலூர் சுங்கச்சாவடி அருகில் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிருந்தாவனத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இவ்விழாவில்,
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய 6 மாநில முதல்-அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள், விஐபிக்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டு குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் இணைந்து செய்து வருகின்றனர். 6 மாநில முதலமைச்சர்கள் வருவதால் சேலத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் (ஹெலிபேட்) மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்