திருச்சி, நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் சுகாதாரக்கேடு தரும் குப்பை மேடு… 7 நாட்களில் சரி செய்ய எம்.பி. உத்தரவாதம்!
திருச்சி மாநகராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வேக்கு சொந்தமான இடம் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் வருவதாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வரப்பட்டது. இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி த.வெ.க பொறுப்பாளரான தர்கா எஸ்.சௌகத், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரான துரை வைகோவிடம் கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து இன்று( செப்டம்பர் 18) எம்பி துரை வைகோ நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் பொதுமக்களுக்கு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அந்த குப்பை மேடு பகுதியை நேரில் ஆய்வு செய்தவுடன் ஒரு வாரத்திற்குள் இதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

Comments are closed.