முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுதர்சன நாச்சியப்பன் (79) இன்று(17-09-2026) காலமானார். சிவகங்கையில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் படிப்பு முடித்த சுதர்சன நாச்சியப்பன், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றியதுடன், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ளார். மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் மத்திய அரசில் அமைச்சராகப் பதவி வகித்த அவர் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளிலும் இருந்துள்ளார். 1999ம் ஆண்டு சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன், பின்னர் 2004 முதல் 2010ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.