தந்தை பெரியார் பிறந்தநாள் விழா: மணப்பாறையில் உள்ள சிலைக்கு த.வெ.க.சார்பில் மாலை அணிவித்து மரியாதை- அன்னதானம்…* ரா. கதிரவன் எம்.எல்.ஏ.உள்ளிட்டோர் பங்கேற்பு..!
தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, மணப்பாறை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான ரா. கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் தினேஷ், ராஜேஷ்வரன், திருநாவுக்கரசு, ஜில்லா குமார், செந்தில்குமார், அருள்பிரகாசம், விக்கி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பார்த்திபன், ஞானசேகர், குணசேகர், பாஸ்கர், சரவணகுமார், பாண்டியன், காயாம்பூ, வெள்ளைச்சாமி, நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நகர செயலாளர்கள் அழகர், திருப்பதி, மற்றும் நேருதாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Comments are closed.