தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் வேறொரு இடத்தில் தலைமைச் செயலகம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்து இருந்தார். அதன்படி, சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமை செயலகம் அமைய உள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் 21.37 ஏக்கர் பரப்பளவில் நிலங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது. அங்கு ரூ.1,200 கோடி மதிப்பில் அனைத்து நவீன வசதிகளுடன் புதிய தலைமை செயலகம் அமைய உள்ளது. திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 3 தனித்தனி குழுக்களை அமைக்கவும் அரசாணை வெளியிட்டுள்ளது.

Comments are closed.