Rock Fort Times
Online News

ஆன்லைன் மற்றும் செயலி மூலம் மதுபானம் விற்பனை: இன்று(ஆகஸ்ட் 6) முதல் அமலுக்கு வருகிறது…!

ஆன்​லைன் மற்​றும் செயலி மூலம் மது​பானம் விற்​பனை செய்யும் முறை இன்​று(06-08-2026) ​முதல் பயன்​பாட்டுக்கு வரவுள்​ளது. தமிழகத்​தில் தற்​போது 4 ஆயிரம் டாஸ்​மாக் கடைகள் இயங்கி வரு​கின்​றன. இந்த கடைகளில் எம்​ஆர்​பி-ஐ விட கூடு​தல் விலைக்கு மது​பானம் விற்​கப்​படு​வ​தாக தொடர்ந்து குற்​றச்​சாட்டு வைக்​கப்​படு​கிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய டாஸ்​மாக் நிர்​வாகம் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. இந்​நிலை​யில் மது​பான விற்​பனைக்கு தனி செயலி மற்​றும் இணைதளம் இன்​று​முதல் பயன்​பாட்​டுக்கு வரவுள்​ள​தாக டாஸ்​மாக் அதிகாரி​கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆன்​லைன் முன்​ப​திவுக்​கான இணை​யதளத்​தில் நுகர்​வோர் முதலில் தங்​கள் அரு​கில் உள்ள கடையை தேர்வு செய்ய வேண்​டும். அதன்பிறகு தங்​களுக்கு தேவை​யான மது வகையை தேர்வு செய்ய வேண்​டும். பணம் செலுத்தும் பக்​கத்​தில் செல்​போன் எண் கொடுத்து ஓடிபி பெற்​று, அதை பதிவு செய்​து, பணம் செலுத்த வேண்​டும். இதையடுத்​து, கியூஆர் குறி​யீடு கொண்ட ரசீது வரும், அதை நுகர்​வோர் டவுன்​லோட் செய்​து, முன்​பதிவு செய்த கடைக்கு சென்று கடை பணி​யாளரிடம் காண்​பிக்க வேண்டும். கடை பணி​யாளர் கடை​யில் உள்ள கருவி முலம் முதலில் நுகர்​வோரின் ரசிதை ஸ்கேன் செய்​வார், பின்​னர் நுகர்​வோர் பதிவு செய்து வந்த மது​பானத்தை எடுத்து அதை​யும் ஸ்கேன் செய்​வார், இரண்​டும் சரி​யாக உள்​ளது என உறு​தி​யான பிறகு ரசீதை பிரிண்ட் செய்​யும் பக்​கம் வரும். அதில் ரசீதை பிரிண்ட் செய்து மது​பானத்தை நுகர்​வோரிடம் வழங்​கு​வார். இவ்​வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்