Rock Fort Times
Online News

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமான மதுபான ஆலையில் அதிரடி ‘ரெய்டு’…!

கரூரில், இன்றைய தினம்(29-07-2026) திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு எம்.பி.க்கு சொந்தமான மதுபான ஆலையிலும் அதிரடி ‘ரெய்டு’ நடத்தப்பட்டு வருகிறது. மன்னார்குடி அருகே, கர்ணாவூர் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஈரோடு, கோவை (பீளமேடு), பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன் பாளையம், நவகரையில் உள்ள கிடங்கு உள்ளிட்ட 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்