மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன்: * தமிழக பட்ஜெட்டில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி காலை 10 மணியளவில் கூட உள்ளது. அன்றைய தினம் த.வெ.க.அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக பட்ஜெட்டில் ‘சிங்கப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் நேற்று (28.07.2026) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் உள்ள இளம் பெண்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.