Rock Fort Times
Online News

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உமறுப்புலவர் தமிழ்ப்பேரவை தொடக்க விழா…!

திருச்சி, ஜமால் முகமது கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை சார்பில் உமறுப்புலவர் தமிழ்ப்பேரவையின் தொடக்க விழா இன்று( 22.07.2026) என்.பி.அப்துல் கபூர் அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் செயலர் – தாளாளர் டாக்டர் அ.கா.காஜா நஜீமுதீன், பொருளாளர் எம்.ஜே.ஜமால் முகமது, உதவிச் செயலர் க.அப்துஸ் சமது , மதிப்புறு இயக்குநர் கா.ந.அப்துல் காதர் நிஹால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் இர.ஜாஹிர் ஹூசைன் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் கூடுதல் துணை முதல்வரும், தமிழ்த்துறைத் தலைவருமான எஸ்.நாகூர் கனி வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தின் இணைப்பேராசிரியரும், துறைத்தலைவருமான சொற்சிலம்பர் மா.சிதம்பரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முற்பகல், இளநிலை முதலாமாண்டு மாணவர்களிடையே “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்” எனும் தலைப்பில் உரையாற்றினார். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கத்திற்கேற்பதாய்மொழியின் தொன்மையையும், தமிழர்களின் வீரத்தையும், மொழிப் பற்றையும் போற்றிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு தமிழ் மக்களின் கடமை என்பதை மாணவர்களின் மனதில் எடுத்துரைத்தார். பிற்பகல், இளநிலை முதலாமாண்டு மாணவிகளிடையே “தேமதுரத் தமிழோசை” எனும் தலைப்பில் உரை வழங்கினார். இவ்விழாவில் 800 மாணவர்களும், 800 மாணவிகளும், 60-க்கும் மேற்பட்ட இருபால் பேராசிரியப் பெருமக்களும் பங்குகொண்டு பயன்பெற்றனர். மேலும், கல்லூரி நாவலர் போட்டியில் வெற்றி பெற்ற நாவலர்களுக்குப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. முடிவில் உமறுப்புலவர் தமிழ்ப் பேரவையின் துணைத்தலைவரும், தமிழ்த்துறை இணைப்பேராசிரியருமான த.செல்வராசு நன்றி கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்