Rock Fort Times
Online News

லண்டனில் பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் மு.க. ஸ்டாலின்… கட்டித் தழுவி வாழ்த்து..!

லண்டனில் படிக்கும் தனது பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர்கல்வி பயின்று வருகிறார். அவரது பட்டமளிப்பு விழா இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்றுள்ளார். மு.க.ஸ்டாலினுடன், அவரது மனைவி துர்கா, உதயநிதி, அவரது மனைவி கிருத்திகா மற்றும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் குடும்பத்தினரும் சென்றுள்ளனர். சுமார் 10 நாட்கள் லண்டனில் ஓய்வெடுக்கவும் ஜூலை 20-ம் தேதிக்குப் பிறகு அவர் சென்னை திரும்புவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து
கொண்டுள்ளனர். மேலும் இன்பநிதியை மு.க. ஸ்டாலின் கட்டியணைத்து வாழ்த்துத் தெரிவித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்