Rock Fort Times
Online News

சென்னையில் அரசு டவுன் பஸ்ஸில் பயணம் மேற்கொண்ட முதல்வர் விஜய்…!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 300 புதிய பஸ்கள் சேவையை முதல்வர் விஜய் இன்று (25-06-2026) தொடங்கி வைத்தார். அதன்படி, டீசலில் இயங்கும் 164 பஸ்கள், எரிவாயுவில் இயங்கும் 136 பஸ்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூர் செல்லும் 29ஏ அரசு பஸ்சில் முதல்வர் விஜய் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். அவர் பஸ்சில் ஏறியவுடன் பஸ் டிரைவரிடம் பஸ்சின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

பஸ்சில் பயணிக்கும் போது தனது செல்போனில் வீடியோ எடுத்து முதல்வர் விஜய் மகிழ்ந்தார். சரியான சில்லறை கொடுத்து பஸ்சில் பயணித்த
முதல்வர் விஜய் கண்டக்டருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்