தமிழக வெற்றிக்கழக தலைவரும், முதல்- அமைச்சருமான விஜய்க்கு இன்று(22-06-2026) பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முதல்வரின் பிறந்தநாளுக்காக தலைமைச் செயலகத்தில் சிறப்பு கேக் வாங்கி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், திருவள்ளூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக ஐந்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர், பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், முதல்வர் சோகத்தில் இருப்பதால் `கேக்கெல்லாம் வெட்ட வேண்டாம்’ என சொல்லி கேக்கை திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.