ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை அரசியல் கட்சியினர் பயன்படுத்தக் கூடாது…* அகில இந்திய ரசிகர் மன்றம் வேண்டுகோள்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைமை அலுவலகம் இன்று(13-06-2026) அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக் கூடாது என தலைவரின் உத்தரவுப்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

Comments are closed.