Rock Fort Times
Online News

புதிய கட்சி தொடக்கமா?- 2 நாளில் சஸ்பென்ஸ் உடைக்கிறார், அண்ணாமலை…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மத்திய அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் தோல்வியை தழுவினர். அண்ணாமலை பாஜக தலைவராக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். டெல்லி புறப்பட்டு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகிறீர்களா என்று கேட்டதற்கு 2 நாட்களில் அனைத்துக்கும் பதில் சொல்கிறேன் என பதில் அளித்து விட்டு புறப்பட்டு சென்றார்.

டெல்லி செல்லும் அண்ணாமலை நாளை( ஜூன் 2) பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்புக்கு பிறகு அண்ணாமலையின் அரசியலின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்