Rock Fort Times
Online News

முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக விஜய் இன்று திருச்சி வருகை:* வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார்…!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக தலை​வர் விஜய் சென்னை பெரம்​பூர் மற்​றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர், பெரம்பூர் தொகுதியை வைத்​துக் கொண்​டு, திருச்சி கிழக்​குத் தொகுதி எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார். இந்​நிலை​யில், திருச்சி கிழக்கு தொகுதி மக்​களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதல்​வர் விஜய் இன்று (ஜூன் 1) திருச்சி வரு​கிறார். இதற்​காக சென்​னையி​லிருந்து தனி விமானத்​தில் திருச்சி விமான நிலை​யம் வரும் முதல்​வர், அங்​கிருந்து டிவிஎஸ் டோல்​கேட், பழைய பால்​பண்​ணை, சஞ்​சீவி நகர், சத்​திரம் பேருந்து நிலை​யம் வழி​யாக தனியார் கல்லூரி வளாகத்துக்கு செல்கிறார். பின்​னர், அங்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ள இடத்​தில் மாலை 4 மணி​யள​வில் பொது​மக்​கள் மத்​தி​யில் நன்றி தெரி​வித்​துப் பேசுகிறார். இந்த நிகழ்​வைத் தொடர்ந்து தமிழகத்​தின் மற்ற மாவட்​டங்​களுக்​கும் சுற்​றுப்​பயணம் செல்ல இருக்​கிறார். முதல்​வர் விமான நிலை​யத்​திலிருந்து விழா நடை​பெறும் இடத்​துக்கு வாக​னத்​தில் வரும்​போது, அவரது வாக​னத்தை யாரும் பின் தொடர வேண்​டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி வரும் முதல்​வர் விஜய்க்கு, திருச்சி விமான நிலை​யத்​திலிருந்து கூட்டம் நடைபெறும் இடம்வரை சாலை​யின் இரு புறங்​களி​லும் வரவேற்பு அளிக்க தவெக​வினர் ஏற்பாடு செய்து வருகின்​றனர். முதல்வர் விஜய் திருச்சி வருகையை முன்னிட்டு திருச்சி விழாக் கோலம் பூண்டுள்ளது. ஆங்காங்கே கட்சி கொடிகளும், பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்