முதல்வர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சியான தருணம்… * விமான பணிப்பெண் நெகிழ்ச்சி…!
முதலமைச்சர் விஜய அரசுமுறை பயணமாக 2 நாள் டெல்லி சென்று வந்தார். அவர் நேற்று முன்தினம் (மே 27) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விஜய் சந்திப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. அதையடுத்து விஜய் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று முதலமைச்சர் விஜய் சென்னை திரும்பினார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் டெல்லியில் இருந்து மீண்டும் சென்னை திரும்பும்போது, அவருடன் விமான பணிப்பெண் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உமா மீனாட்சி என்ற அந்த விமானப் பணிப்பெண், நடிகராக இருந்து முதலமைச்சரான விஜயை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால், இந்த விமானப் பயணம் “மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்று குறிப்பிட்டு அந்தப் படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Comments are closed.