Rock Fort Times
Online News

“90% அதிமுக நிர்வாகிகள் தவெகவுக்கு வருவார்கள்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு..!

சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதன்படி, அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகி கமலக்கண்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்தனர். மேலும், அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மற்றும் அண்ணா தொழிற்சங்க டாஸ்மாக் பிரிவு நிர்வாகிகளும் கட்சியில் இணைந்தனர். தவெகவுக்கு இதுவரை தனித்த தொழிற்சங்கம் இல்லாத நிலையில், கமலக்கண்ணன் இணைந்ததையடுத்து புதிய தொழிற்சங்கம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “இன்னும் ஒரு மாதத்தில் 90 சதவீத அதிமுக நிர்வாகிகள் த.வெ.க.வுக்கு வருவார்கள். அதிமுகவினருக்கு எந்த ஆஃபரும் கொடுத்து அழைக்கவில்லை. த.வெ.க. மட்டுமே தற்போது ஒரே நம்பிக்கை என அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். அதிமுகவில் இருந்து வரும் தலைவர்களை நாங்கள் ஒரு குடும்பம் போல வரவேற்கிறோம். எம்.ஜி.ஆர் வழியில் நடக்கும் கட்சி த.வெ.க. தான். செங்கோட்டையனுக்கு தலைவர் கொடுக்கும் மரியாதையை பார்த்தே பலர் வருகிறார்கள். 90 சதவீத அதிமுக தொண்டர்கள் த.வெ.க.வில் சேர முடிவு செய்து விட்டனர். பா.ஜ.க.வுடன் இணைந்து சந்தித்த தோல்விகளையும் அதிமுக தொண்டர்கள் சகித்துக் கொண்டார்கள். ஆனால் தி.மு.க. – அதிமுக இணைந்து செய்த அரசியல் சூழ்ச்சியால் அவர்கள் நம்பிக்கை இழந்தனர். ஜெயலலிதா தற்போது இல்லை என்ற எண்ணமும் அதற்குக் காரணம். அதனால்தான் அவர்கள் த.வெ.க.வில் வந்து சேருகின்றனர்.

புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம், ‘இ.பி.எஸ். முதலமைச்சராக ஆதரவு’ என கையெழுத்து கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. 47 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு இ.பி.எஸ். எப்படி முதலமைச்சராக முடியும்? இதை முதலில் எதிர்த்தது கம்யூனிஸ்ட் கட்சிகளும், வி.சி.க.வும் தான். செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தபோது, ‘சிறிய கட்சி’ என விமர்சித்தனர். தமிழகத்தில் தற்போது கட்சி நிதி முறை ஒழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்