பெரம்பூர் தொகுதியை முதல்வர் விஜய்க்கு விட்டுக் கொடுத்த த.வெ.க.நிர்வாகி சிவாவுக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி..!
சென்னை, பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட அத்தொகுதியை விட்டுக் கொடுத்த த.வெ.க நிர்வாகியான பெரம்பூர் சிவாவிற்கு தற்போது தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது . இதற்கு முன்பு வாரியத்தின் பொறுப்பாளராக இருந்த பூச்சி முருகன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து பெரம்பூர் சிவாவிற்கு இப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2026 தேர்தல் பிரச்சார சமயத்தில் பெரம்பூருக்கு பிரச்சாரம் சென்ற தற்போதைய முதல்வர் விஜய், எனக்காக தொகுதியை விட்டுக் கொடுத்த சிவாவுக்கு நிச்சயம் நான் ஏதாவது செய்து கொடுப்பேன் என உறுதி அளித்து இருந்தார். அந்தவகையில் தற்போது இவருக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பொறுப்பு தேடி வந்துள்ளது.

Comments are closed.