Rock Fort Times
Online News

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூடுகிறது, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு அணியாகவும் அதிமுக எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றி கழக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். இதனால், அவர்களை கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதோடு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால், அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் பொதுக்குழுவை கூட்ட முயற்சித்து வரும் நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், நாளை (மே 19) காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. உட்கட்சி பூசல் முற்றிய நிலையில், இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்