திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்த கனமழை…! * பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளத்தில் தத்தளித்து சென்ற வாகனங்கள்…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேபோல திருச்சி மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று(23-10-2026) மாலை வானில் கரு மேகங்கள் திரண்டன. சற்று நேரத்தில் கனமழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது. இதனால் திருச்சி மாநகர சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. இதே போல மணப்பாறை, வையம்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இன்று மாலை கனத்த மழை பெய்தது.

Comments are closed.